வீரவன்ச வீட்டில் மரணம்..! மனரீதியாக பாதிக்கப்பட்ட மகள்..! கண்டுகொள்ளாத சட்டம்

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட வீரவன்சவை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

விமல் வீரவன்சவை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரது சட்டதரணி அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

விமல் வீரவன்சவின் வீட்டில் அண்மையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன்காரணமாக தனது மகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்து பிணை வழங்குமாகு சட்டதரணி கோரியுள்ளார்.

அவ்வாறு இருக்கும் போது விமல் வீரவன்சவை விளக்கமறியலில் வைத்தால் மகளின் மனநிலைமை மேலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக மனிதாபிமான பிரச்சினைகளை ஆராய்ந்து விமலுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி அனுமதி கோரினார்.

எனினும் பொலிஸாரினால் நீதிமன்றில் சமரப்பிக்கப்பட்ட பீ அறிக்கை தொடர்பில் விமல் வீரவன்சவின் சட்டதரணி எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

இதனால் நீதவான் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விமல் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதோடு எதிர்வரும் 24ஆம் திகதி பிணை வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Send Feedback
Vethu
Journalist